Category: செய்திகள்

யாழ் இந்து மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட யாழ் இந்து மாணவர் விடுதி 03.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் கல்லூரி விடுதி மாணவர்கள் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,விடுதி அத்தியட்சகர், விடுதி மேற்பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  பழைய மாணவர் சங்க வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் அமைச்சர் கௌரவ மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி திருத்த வேலைகள் இடம்பெற்றது.    

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்

புதிய நிர்வாகசபைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம் தேர்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை மீளப்பெறவிரும்பின் 04.02.2020 பி.ப 1.30 மணி வரை தேர்தல் குழுவிற்கு அறிவித்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். போட்டி உள்ள இடங்களுக்கான தேர்தல் 9 ம்திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் நடைபெறும்

சங்கத்தின் நிதி உதவியுடன் 16 CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டது.

பாடசாலையின் குமாரசுவாமி மண்டப பகுதியிற்கு யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத்தின் நிதி உதவியுடன் 16 CCTV கமெராக்கள் பொருத்தப்பட்டது.

வருடாந்த பொதுக்கூட்ட அறிவிப்பு

வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகக் குழுத் தெரிவும் – 09/02/2020 ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் . நிர்வாக சபைத்தெரிவுக்கான வேட்பு மனுக்கோரல் ஏற்கனவே  தேர்தல் குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது -விண்ணப்ப  முடிவுத்திகதி 28.01.2020 பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபைக்கான தேர்தல் அறிவிப்பு 2020

பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தேர்தல் அறிவிப்பு 2020

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்க யாப்பின்4(உ)ஆம் பிரிவிற்கமைய புதிய நிர்வாகக் குழுவிற்கான(2020-2021) தெரிவு இந்தவருடம் நடைபெறவுள்ளது. கீழே விபரிக்கப்படும் பதவிகளுக்கான நியமனப் பத்திரங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்யவும் . சங்க யாப்பு பார்வையிட   

புதிய அதிபருக்கு பழைய மாணவர் சங்கம் வாழ்த்து

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டு இன்று(16.10.2019)  பதவியேற்றுள்ளார். பழையமாணவர் சங்கத்தலைவர் புதிய அதிபருக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

புதிய பதில் அதிபர் நியமனம்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித் துறை, நிர்வாகத் துறை, சட்டத் துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி மிக்க ரட்ணம் செந்தில்மாறன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமாவார்(உயர்தர பிரிவு 2002) . வருகின்ற வாரம் அவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது

பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம்

யாழ் .இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 03.02..2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு   கல்லுாரி வீதி நீராவியடியில் அமைந்துள்ள  இலங்கை வேந்தன் கலைக்கல்லுாரியில்  நடைபெற உள்ளது. கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் 1.கல்லுாரியில் எமது சங்கத்தின் அறையில் கொழும்பு பழையமாணவர்சங்க பெயர்ப்பலகை பொருத்தப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்தல் 2.அண்மையில் உருவாக்கப்பட்ட பழையமாணவர்சங்க பேரவை தொடர்பில்  ஆராய்தல் சகல  உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம் Dr.அ.ஜெயக்குமரன் செயலாளர் யாழ் .இந்துக்கல்லுாரி  பழையமாணவர்சங்கம் யாழ்ப்பாணம் 20.01.2019  …
Read more

கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்

தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான கட்டணங்களும் செலுத்தப்படவேண்டியதில்லை. அதுதொடர்பில் வேறு எந்த விதமான கொடுக்கல் வாங்கல்களும் செய்யப்படவேண்டியதில்லை என்பதையும் பெற்றோர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம் கடந்த 110 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” உலகளாவிய ரீதியில் இயங்கும் பல்வேறு…
Read more

இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு

இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது