கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்

கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்

தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான கட்டணங்களும் செலுத்தப்படவேண்டியதில்லை. அதுதொடர்பில் வேறு எந்த விதமான கொடுக்கல் வாங்கல்களும் செய்யப்படவேண்டியதில்லை என்பதையும் பெற்றோர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம்

கடந்த 110 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” உலகளாவிய ரீதியில் இயங்கும் பல்வேறு சங்கங்களுடன் இணைந்தும் தனித்தும் கல்லுாரியின் பௌதீக மற்றும் கல்வி அபிவிருத்திகளில் பெறுமதியான பங்கினை ஆற்றி வருகின்றது.

இந்த வகையில் அதற்கான நிதி மூலங்களை அது பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் இருந்து பெற்று செயற்பட்டு வருகின்றது.

கல்வி பயிலும் மாணவர்களிற்கான வசதிகளை மேலும் வளப்படுத்தி அதற்கான சூழலையும் பௌதீக வளங்களையும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கு புதிதாக கல்லுாரியில் இணையும் ”வசதி படைத்த” மாணவர்களின் பெற்றோர்கள் தங்களால் முடிந்தளவிலான நன்கொடைகளை வழங்க முடியும். இது அவர்களது ”சொந்த விருப்பாக” அமையலாம்.

அது உங்கள் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு மட்டுமல்லாது மற்ற மாணவர்களுக்கும் பேருதவியாக அமையும். யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்திற்கு வழங்கப்படும் நன் கொடைகளுக்கான உரிய பற்றுச்சீட்டுக்களை பழையமாணவர் சங்கம் வழங்கும் அதேவேளை அந்த நன்கொடைகள் சரியான வழியில் பயன்படுத்தப்படுவதையும் வெளிப்படைத்தன்மையினையும்
உறுதிசெய்யும்.அதேவேளை உங்கள் உதவிகளை அரசாங்க நிர்வாகத்தில் உள்ள பாடசாலை அபிவிருத்தி சபைக்கும் (SDC) வழங்க முடியும்

பழையமாணவர் சங்கத்திற்கு அபிவிருத்தி நன்கொடைகள் வழங்குவோர் பின்வரும் வங்கிக்கணக்கிலக்கத்தில் மட்டும் வைப்பிலிட்டு தெரியப்படுத்தி பற்றுச்சீட்டை பொருளாளரிடம் பெற்றுக் கொள்ள முடியும்

பழையமாணவர் சங்க கணக்கு விபரம்
———————————————————–
Jaffna Hindu College Old Boys Association 
Account No: 1095228
Bank: Bank of Ceylon
Branch: 2nd branch, Stanley Road, Jaffna
———————————————————–

அதை விட எமது சங்கத்தின் பெயரில் வேறு எந்த கணக்குகளும் நன்கொடை ஏற்புக்கு அறிவிக்கப்படவில்லை. அத்துடன் 110 வருடங்களுக்கு மேலாக முறைப்படியான பொதுச்சபை கூட்டப்பட்டு இயங்கி வரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” தவிர்ந்த வேறு எந்த பெயரிலும் பழைய மாணவர் சங்கம் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை என்பதையும் இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகின்றோம்.

பல்வேறு தரப்பிலும் இருந்து வந்த சந்தேகங்களை தெளிவிக்கும் முகமாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுகி்ன்றது. இது தொடர்பில் மேலதிக விளங்கங்களை சங்கத்துடன் தொடர்பு கொண்டு பெறமுடியும் .

-யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம், 10.1.2019

2 1