யாழ் இந்து மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டது

யாழ் இந்து மாணவர் விடுதி திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட யாழ் இந்து மாணவர் விடுதி 03.02.2020 அன்று காலை 10.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் கல்லூரி விடுதி மாணவர்கள் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,விடுதி அத்தியட்சகர், விடுதி மேற்பார்வையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  பழைய மாணவர் சங்க வேண்டுகோளுக்கமைவாக முன்னாள் அமைச்சர் கௌரவ மனோகணேசனின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி திருத்த வேலைகள் இடம்பெற்றது.