News & Events

கல்லுாரி அனுமதிக்கான நன்கொடைகள் குறித்தான விழிப்புணர்வு அறிவித்தல்

தற்போது அரசாங்க வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் புதிய மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. கல்லுாரியின் அனுமதிக்கு நன்கொடை வழங்குவது கட்டாய முன் நிபந்தனையல்ல. கல்லுாரி புதிய மாணவர் அனுமதிக்காக வழமையான மாணவர் வசதிகள் சேவைகள் கட்டணம் தவிர்ந்த எந்த விதமான கட்டணங்களும் செலுத்தப்படவேண்டியதில்லை. அதுதொடர்பில் வேறு எந்த விதமான கொடுக்கல் வாங்கல்களும் செய்யப்படவேண்டியதில்லை என்பதையும் பெற்றோர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம் கடந்த 110 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பட்டுவரும் ”யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழைய மாணவர் சங்கம்” உலகளாவிய ரீதியில் இயங்கும் பல்வேறு…
Read more

இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு

இந்து காலாண்டிதழ் 2 வெளியீடு வெளிவந்துள்ளது

பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் 2018

யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் (இந்து இரவு 2018)  டிசம்பர் 30 திகதி நோத் கேற் விடுதியில் மாலை 6.30 மணிக்கு இடம்பெற்றது பெருமளிவிலான பழையமாணவர்கள் கலந்து சிறப்பித்தனர் முதல் தடவையாக குடும்பமாக பங்குபற்றும் வாய்ப்பு. வழங்கப்பட்டிருந்தது மேலும் படங்கள் பாகம் 1 பாகம் 2

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக சம்பியனாகியுள்ளது. இறுதிப் போட்டியில் கொழும்பு தர்மபாலா கல்லூரியை எதிர்த்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 74 : 39 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர். இத் தொடரின் சிறந்த “Offensive Player” ஆக யாழ் இந்துவின் சஞ்சயன் அவர்களும், தொடரின் Most Valuable Player ஆக கீர்த்தனன் அவர்களும்…
Read more

வெள்ள அனர்த்தங்களில் உதவிப்பணிகளிலும் உதவிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடு

கிளிநோச்சி முல்லைத்தீவு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் உதவிப்பணிகளிலும் உதவிகளை ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளிலும் யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர்கள் மற்றும் சமூகத்தினரும் தனிப்பட்ட ரீதியிலும் குழுக்களாகவும் ஏற்கனவே ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்ற நிலையில் பழையமாணவர் சங்கம் தன்னாலான பங்களிப்புக்களை வழங்க முன்வந்துள்ளது. சங்கத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகள் பங்களிப்புக்கள் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள உதவிக்குழுக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஊடாக வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதுதொடர்பில் இதுவரை உதவிவழங்க சந்தர்ப்பம் கிடைக்காத பழையமாணவர்கள் பழையமாணவர் சங்கத்தின்…
Read more

சிவலிங்கம் பிரதிஸ்டை செய்வது தொடர்பில் பழைய மாணவர் சங்கத்தின் நிலைப்பாடு

கல்லூரியின் பிரார்த்தனை மண்டபத்துக்கு முன்பாக உள்ள புராதன மேடையில் சிவலிங்கம் பிரதி ஸ்டை செய்வது தொடர்பில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் அதிபரிடம் கையளிக்கப்பட்ட கடிதம் சகல பழைய மாணவர்களினதும் தகவலுக்காக இங்கே பகிரப்படுகிறது

பழைய மாணவர் சங்கத்தின் இந்து – காலாண்டிதழ், (2018-01)

பழையமாணவர் சங்கத்தின் இந்து – காலாண்டிதழ் வெளிவந்துள்ளது  

பழைய மாணவர்சங்கங்களின் நிலைப்பாடு தொடர்பான கூட்டறிக்கை

பழைய மாணவர்சங்கங்களின் நிலைப்பாடு தொடர்பான கூட்டறிக்கை. இக்கூட்டறிக்கையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர்சங்கம் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சங்கங்களின் சார்பில் இருசங்கங்களினதும் தலைவர்களும் செயலாளர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Championship Cricket 2018

JHC – OBA organized an inter batch Cricket tournament Championship Cricket 2018 on 28th July 2018 @ JHC Ground.Princiapl S.Nimalan , retired Deputy Principal Mr.P.Maheswaran, retired Teachers Mr.Sivarajah and Mr Gunasingam were Special Guest.  More Gallery Here 

அதிபர் பொன்னம்பலம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு

இன்று 26.07.2018 மாலை 4 மணிக்கு கல்லுாரியில் பழையமாணவர் சங்கத்தால் அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரையும் கலந்துகொண்டு அவருடைய ஆத்மா சாந்திக்காக பிரார்திப்போம்