வரலாற்று வெற்றியை பதிவு செய்தது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்திய 19 வயதிற்குட்பட்ட கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அணி வரலாற்றில் முதல்தடவையாக சம்பியனாகியுள்ளது.

இறுதிப் போட்டியில் கொழும்பு தர்மபாலா கல்லூரியை எதிர்த்து ஆடிய யாழ் இந்துக் கல்லூரி அணி 74 : 39 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இத் தொடரின் சிறந்த “Offensive Player” ஆக யாழ் இந்துவின் சஞ்சயன் அவர்களும், தொடரின் Most Valuable Player ஆக கீர்த்தனன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கூடைப்பந்தாட்ட வரலாற்றில் வடமாகாணத்தை சேர்ந்த 19 வயதுப்பிரிவு அணி ஒன்று முதல் தடவையாக தேசிய மட்டத்தில் சம்பியனாகியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

49682647_2389638637776001_1566754990989508608_n 49268386_2389638501109348_5919746156992135168_n