அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு

அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான அழைப்பு

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திரால் முன்னெடுக்கப்படவேண்டியுள்ள கல்லூரிசார்ந்த அவசர தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதித்தேவைகள் பின்வருமாறு  அடையாளப்படுத்தப்படுகிறது.
1. ஒலிம்பியாட் போட்டிகளுக்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல்கேரியா (Balgeriya) செல்லவிருக்கும் மாணவனுக்கான போக்குவரத்து மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் (உடனடித்தேவை). (தோராயமாக) ரூ.300,000.00
2. வினாடிவினா போட்டியொன்றிற்காக தலைநகர் சென்றுவருவதற்கான செலவினங்கள்( நால்வருக்கானது) (தோராயமாக) ரூ.30,000.00
3. பாடசாலை பேருந்து திருத்த உத்தேச செலவினம்: (தோராயமாக) ரூ. 20,000.00
4. க.பொ.த (உ/த) 2018 மாணவர்களுக்கான பரீட்சை முன்ணோடி கருத்தரங்கு: (தோராயமாக) ரூ. 80,000.00
மேற்படி நிதித்தேவைகளை நிறைவேற்றுவதற்காக கல்லூரி பழையமாணவர்களின் நிதி பங்களிப்புகளை எதிர்பார்த்து நிற்கிறோம். ஆர்வமுள்ளவர்கள் சங்க தலைவர் திரு.தனேஸ்குமார் அவர்களை தொடர்புகொள்ளவும்.
இச்செலவினங்களுக்கான நிதிப்பங்களிப்பு செய்ய விரும்பும் பழைய மாணவர்கள் கீழே தரப்பட்டுள்ள எமது சங்க வங்கி கணக்கில் வைப்பலிட்டு, பின்னர் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தை சங்க மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
வைப்பிலடப்படும் பணம், வைப்பிலிட்டவர் பெயர் மற்றும் அப்பணம் பயன்படுத்தப்பட்ட காரணம் என்பன இவ்விணையத்தளத்தில் அவ்வப்போது உடனடியாக அறிவிக்கப்படும்.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவைப்படின் சங்க பொருளர் திரு.தமிழன்பனை தொடர்புகொள்ளமுடியும்.
மின்னஞ்சல் முகவரி: president@jhcobajaffna.com
பொருளாளரின் தொலைபேசி: 0772497160.
Jaffna Hindu College Old Boys Association 
Bank Acc.No: 1095228.
Bank of Ceylon, Jaffna Branch