விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை

hostel1

விடுதி புனரமைப்புப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் விடுதி மாணவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்று பழைய மாணவர் சங்கத்தினால் 13.07.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப்பயிற்சிப்பட்டறையில் யாழ் இந்து விடுதி மாணவர்களுக்கான ஒழுக்கத்திற்குப் பொறுப்பாசிரியராகவிருந்த சந்தியாப்பிள்ளை ஆசிரியர் கலந்து கொண்டார்.

தன்னுடைய காலத்தில் விடுதி மாணவர்களின் ஒழுக்கம் எவ்வாறு பேணப்பட்டதென்பதையும் அதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார். முன்னாள் விடுதி மாணவனும் பழைய மாணவர் சங்க செயலாளருமான வைத்திய நிபுணர் சிறீகரன் போசாக்கு உணவுகள் பற்றியும் உடற்பயிற்சியின் அவசியம் பற்றியும் விளக்கவுரையளித்தார். முன்னாள் விடுதி மாணவனும் தற்போதய யாழ் பல்கலைகழக இரசாயனவியல் துறை தலைவருமான திரு.மனோரஞ்சன் விடுதி வாழ்க்கையின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்

hostel1 hostel2