இந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள்

இந்துவின் முத்தமிழ் மாலை நிகழ்வில் பார்வையாளரை பெரிதும் கவர்ந்த உள்ளுர் கலைஞர்கள்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரியின் 125 வது ஆண்டினை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்கம்  முற்று முழுதாக உள்ளுர் கலைஞர்களினை கொண்டு பிரமாண்டமாக நடாத்திய கட்டணத்துடன் கூடிய முத்தமிழ் மாலை 2015 நிகழ்வு பார்வையாளரினை பெரிதும் கவர்ந்ததுடன் அவர்கள் கலைஞர்களையும் பாராட்டிச்சென்றனர்.

11.7.2015 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை கல்லுாரியின் புதிதாக அமைந்த சபாலிங்கம் கலையரங்கில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில்

1.கோபிதாசின் வயலின் இசை
2.பிரியதர்ஸினி வாகீசனின் நெறியாள்கையில் நர்த்தன ஷேத்திராவின் நிருத்திய அர்ப்பணம்
3.ஜோன் கலிஸ்ரனின் ஒரு கூத்தனின் குறிப்பேடு தனிநடிப்பு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

மிகவும் நேர்த்தியான முறையில் வெளிநாட்டுக்கலைஞர்களின் தரத்திலும் அதிகமான தரத்தில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றதை தாம் உணர்ந்ததாக பார்வையாளர் கூறிச்சென்றனர்.

 

நடன நிகழ்வு வர்ணம் ,சூரன் போர், மாயவன் அவதாரம் ,மயில் நடனம் ஆகிய 4 தலைப்புக்களில் இடம்பெற்றது .

தனிநடிப்பு இன்றைய நிலையில் பழைய  கலைஞர்களுக்கும் கலைக்கும் உள்ள மதிப்பினை மிகவும் சிறப்பான முறையில் எடுத்தியம்பியிருந்தது .

இணையம் ஊடாக அனலை எக்ஸ்பிரஸ் ஊடகத்தினால் செய்யப்பட்ட நிகழ்வுகளின் நேரடி ஒலிபரப்பின் ஒளிக்காட்சிகளை இங்கே காணலாம்

இந்த நிகழ்வுக்கான பிரதான அனுசரணையினை Micro PC ,Metro Travel நிறுவனங்கள் வழங்கியிருந்தன. இணை அனுசரணையினை City Hardware சாரங்கா நகைமாடம் Andra Printers ஆகிய நிறுவனங்கள் வழங்கியிருந்தன. ஊடக அனுசரணையினை உதயன் பத்திரிகை மற்றும் தமிழ் FM வானொலி வழங்கியிருந்தது.

நிதிசேகரிப்பு நிகழ்வுகளை உள்ளுர் கலைஞர்களைக்கொண்டும் தற்போதைய காலத்தில்  நடாத்தலாம் என்பதற்கு ஒரு முன்மாதிரியானதாக இந்நிகழ்வு இடம் பெற்றிருந்தது

இந்நிகழ்வில் சகல தரப்பு வயதினரும் கலந்து கொ்ண்டிருந்தமை நிகழ்வுக்கு மேலும் அழகு சேர்த்திருந்தது.ஒவ்வொரு நிகழ்வின் இறுதியிலும் கலைஞர்கள்  கௌரவிக்கப்பட்டனர்.