Category: செயற்பாடுகள்

Championship Cricket 2018

JHC – OBA organized an inter batch Cricket tournament Championship Cricket 2018 on 28th July 2018 @ JHC Ground.Princiapl S.Nimalan , retired Deputy Principal Mr.P.Maheswaran, retired Teachers Mr.Sivarajah and Mr Gunasingam were Special Guest.  More Gallery Here 

Championship-Cricket 2018

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லுாரியின் உயர்தர மற்றும் சகல அணி பழையமாணவர்களும் பங்குகொள்ளும் மாபெரும் துடுப்பாட்ட போட்டித்தொடர். நாளை (26/07/2018)பிற்பகல் 4:00 மணிக்கு முதல் உங்கள் அணிகளை பதிவு செய்து கொள்ளுங்கள்.

முத்தமிழ் மாலை 2018

4வது வருடமாக யாழ் இந்துக்கல்லுாரி பழையமாணவர்சங்கத்தின் முத்தமிழ் மாலை 2018. யாழ் இந்துக்கல்லுாரி சபாலிங்கம் அரங்கில் 14.07.2018 அன்று மாலை வெற்றிகரமாக நடந்தேறியது [ngg_images source=”galleries” container_ids=”12″ gallery_width=”600″ gallery_height=”400″ cycle_effect=”fade” cycle_interval=”10″ show_thumbnail_link=”1″ thumbnail_link_text=”[Show thumbnails]” order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″ display_type=”photocrati-nextgen_basic_slideshow”]

சூரிய மின்கலங்கள் அன்பளிப்பு

எமது சங்கத்தினூடாக 1987 உயர்தர பழைய மாணவர்கள் சூரிய கலங்கள் பொருத்துவதற்கு ம். 40 மின் விசிறிகள் இணைப்பதற்கும் முன் வந்துள்ளனர் இதனால் பாடசாலை மின் செலவு பெருமளவு குறையும் வாய்ப்புள்ளது

ஆசிரியர் தினம் 2016

ஆசிரியர் தினம் 2016 குமாரசுவாமி மண்டபத்தில் எமது சங்கத்தின் அனுசரணையுடன் சிறப்பாக நடைபெற்றது . சகல ஆசிரியர்களும் ஆசிரியதின நினைவுப் பரிசு  வழங்கி எமது சங்கத்தினால் கௌரவிக்கப்படனர் . மேலும் நீண்ட கால ஆசிரியர் பணியை பூர்த்தி செய்த 5 ஆசிரியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி எமது கௌரவப்படுத்தியது.

முத்தமிழ் மாலை 2016

இந்துவின் “முத்தமிழ் மாலை-2016” கலைநிகழ்வுகள்  ஞாயிறு (24.07.2016) மாலை சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன.வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு பறைஇசையுடன்ஆரம்பமான நிகழ்வுகள் நம் கலைஞர்களின “உயிரிசையாகும்ஏழிசை” ஸ்ரீ பரதமுனிநடனகலையகத்தினரின் “நாட்டியாஞ்சலி” கம்பன்கழகம் வழங்கிய “கம்பவாரிதி” ஜெயராஜ் தலைமையில் தற்காலயாழ் சமூகம் எதிர்நோக்கும் சவாலினைமையப்படுத்திய விவாதஅரங்கும் அணிசெய்தன. நிதிசேகரிப்பு நிகழ்வுகளிற்கு தென்னிந்திய கலைஞர்களை அழைத்துவரும் இக்காலகட்டத்தில் உள்ளுர் கலைஞர்களைக் கொண்டும் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியானதாக இரண்டாவது வருடமும் எமது சங்கம் இந்த நிகழ்வை நடாத்திக் காட்டியுள்ளது.

கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை

எமது கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலுக்கான இலத்திரனியல் ஓட்டப் பலகை நேற்று எமது நிர்வாகக் குழுவினரால் கல்லூரியின் பிரதி அதிபர் திரு நிமலன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பினை எமது பழைய மாணவனும் உதயன் குழும நிர்வாக இயக்குனருமான கௌரவ ஈ. சரவணபவன் அவர்கள் வழங்கியிருந்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான உதவி

எமது சங்கத்தினால் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்கள் 22 /05/2016 கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் வழங்கப்ட்டன.

Seventy Five in Hundred and Twenty Five: Jaffna OBA honours old boys aged 75 and above

Jaffna OBA arranged a special event named “Seventy Five in Hundred and Twenty Five” to honour all the old boys who are aged 75 or above. This was held last Sunday, 7th February 2016, at the College’s Sabalingam Auditorium. Dr.K.Nanthakumaran graced the event as the Chief Guest.  Fifteen old boys were honoured at the event.…
Read more

இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு: ஒட்டிசுட்டான்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தினால் இரண்டாவது தொகுதிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (02.11.2015) ஒட்டிசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. ஓட்டிசுட்டான் பிரதேச செயலரும் எமது பழையமாணவனுமாகிய திரு.குருபரனும் வன்னிப்பிராந்திய சங்கத்தின் பொருளாளர் திரு.அகிலனும் புத்தகங்களை அதிபர் திரு.கருணாகரன் அவர்களிடம் கையளித்தனர்.