புதிய பதில் அதிபர் நியமனம்

maran

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் புதிய பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித் துறை, நிர்வாகத் துறை, சட்டத் துறை, விளையாட்டுத் துறை எனப் பல்வேறு துறைகளிலும் தேர்ச்சி மிக்க ரட்ணம் செந்தில்மாறன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனுமாவார்(உயர்தர பிரிவு 2002) . வருகின்ற வாரம் அவர் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது