கல்லூரியின் பரிசளிப்பு விழா -2016

pr102

எமது கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 19.09.2016 அன்று கல்லூரி அதிபர் ஐ.தயானந்தராஜா தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரிசளிப்பு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் இந்துவின் பழைய மாணவனும், இலங்கையின் தலைமை நீதியரசருமாகிய க.ஸ்ரீபவன் அவர்களும் அவரது பாரியார் திருமதி ஜெயந்தி ஸ்ரீபவன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இப் பரிசளிப்பு நிகழ்வில் தரம் 6 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்களுக்கு கல்வி,

விளையாட்டுக்களின் திறமையின் அடிப்படையில் பரிசில்கள் வழங்கப்பட்டன.  2015ம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரம், க.பொ.த உயர்தரம் என்ற ரீதியில் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.  சர்வதேச, தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களும், விளையாட்டு வீரர்களுக்கு வர்ண விருதுகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்விற்கு பாடசாலை ஆசிரியர்கள் , ஆசிரியர்ககள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.

வழமை போல் இந்த விழா சிறப்பாக நடைபெற எமது சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கியதுடன் நன்றியுரையை எமது சங்கத்தின் சார்பாக எமது உப செயலர் தவருபன் வழங்கினர்.

 

pr001

 

pr087

pr102
pr106 q039 14435030_10154038405374141_3177850012037096995_o