விற்பனை கூடம் ஆரம்பம்

விற்பனை கூடம் ஆரம்பம்

எமது யாழ்பாண பழைய மாணவர் சங்கம் மாணவர்களின் நலன் கருதி கல்லுாரி ஞான வைரவர் ஆலயத்தின் அருகில் உள்ள பழைய மாணவர் சங்க அலுவலகத்தினை விற்பனை கூடமாக மாற்றியுள்ளது. இங்கே மாணவர்கள் தமக்கு வேண்டிய கற்றல் உபகரணங்களினையும் இதர சேவைகளயும் நியாய விலையில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விற்பனைக்கூடத்தின் ஊடாக பெறப்படும் வருமானம் சங்கத்தின் ஊடாக பாடசாலை மேம்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். சங்கத்தின் நிதி மேம்பாட்டுக்குழு இதனை முகாமை செய்கின்றது. விரைவில் கூடுதலான சேவைகளையும் கற்றல் உபகரணங்களையும் அங்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்