யாழ். இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரத்ததான முகாம்

Jaffna_Hindu_Blood_Donation_2015_01

வரலாற்று பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசையில் சமுகப்பொறுப்புணர்வுடன் கூடிய செயற்றிட்டமாக இரத்ததான முகாம் 01/03/2015 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 3.30 மணிவரை கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்புற இடம்பெற்றது.

“ஒரு துளி உயிர் தரும்” என்ற தொனிப்பொருளில் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இரத்தான நிகழ்வுகள் யாவும் கல்லூரி கீதத்துடன் கல்லூரி பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் ஆசிச் செய்தியுடன் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இச்செயற்பாடு மூலம் சமுகத்தின் அத்தியாவசிய இரத்த தேவையினை நிறைவேற்ற தம் பங்கினை யாழ் இந்து சமுகத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.வரலாற்று பாரம்பரியம் மிக்க யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளின் வரிசையில் சமுகப்பொறுப்புணர்வுடன் கூடிய செயற்றிட்டமாக இரத்ததான முகாம் 01/03/2015 ஞாயிற்றுகிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 3.30 மணிவரை கல்லூரி கேட்போர் கூடத்தில் சிறப்புற இடம்பெற்றது.

“ஒரு துளி உயிர் தரும்” என்ற தொனிப்பொருளில் ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பழையமாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். இரத்தான நிகழ்வுகள் யாவும் கல்லூரி கீதத்துடன் கல்லூரி பிரதி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் ஆசிச் செய்தியுடன் கல்லூரி யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு சுந்தரேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இச்செயற்பாடு மூலம் சமுகத்தின் அத்தியாவசிய இரத்த தேவையினை நிறைவேற்ற தம் பங்கினை யாழ் இந்து சமுகத்தினர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.