ஆரோக்கிய உணவகம்

ஆரோக்கிய உணவகம்

கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பழைய மாணவர் சங்க ஏற்பாட்டில் கல்லூரியில் முதன் முறையாக ஆரோக்கிய உணவகம் 06.06.2022 முதல் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரோக்கிய உணவக நடைமுறைப்படுத்தல் அதிபரின் அறிமுக உரையுடன் பழைய மாணவர் சங்க செயலாளர் வைத்தியர் கோ.றஜீவ் மற்றும் செயற்குழு உறுப்பினர் யதுராஜ் அவர்களது பங்கேற்றலுடன் இன்று (06.06.2022) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரோக்கிய உணவுகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்களின் அமோக வரவேற்பு கிடைக்கப் பெற்றது.
இலைக்கஞ்சி , கீரை வடை, அன்னாசி /பப்பாசி பழச்சாறு , கடலை பால் என்பன இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இலைக் கஞ்சி இலவசமாக வழங்கப்பட்டது.இதன் போது மருத்துவ பீட பீடாதிபதியும் எமது சுகாதார மேம்பாட்டு உபபிரிவு உறுப்பினருமான பேராசிரியர் சுரேந்திரகுமாரன் அவர்களும் கலந்து கொண்டார்.