இந்துவின் “முத்தமிழ் மாலை-2016” கலைநிகழ்வுகள் ஞாயிறு (24.07.2016) மாலை சபாலிங்கம் அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றன.வித்தியாசமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு பறைஇசையுடன்ஆரம்பமான நிகழ்வுகள் நம் கலைஞர்களின “உயிரிசையாகும்ஏழிசை” ஸ்ரீ பரதமுனிநடனகலையகத்தினரின் “நாட்டியாஞ்சலி” கம்பன்கழகம் வழங்கிய “கம்பவாரிதி” ஜெயராஜ் தலைமையில் தற்காலயாழ் சமூகம் எதிர்நோக்கும் சவாலினைமையப்படுத்திய விவாதஅரங்கும் அணிசெய்தன. நிதிசேகரிப்பு நிகழ்வுகளிற்கு தென்னிந்திய கலைஞர்களை அழைத்துவரும் இக்காலகட்டத்தில் உள்ளுர் கலைஞர்களைக் கொண்டும் சாதிக்கலாம் என்பதற்கு முன்மாதிரியானதாக இரண்டாவது வருடமும் எமது சங்கம் இந்த நிகழ்வை நடாத்திக் காட்டியுள்ளது.
Read More