பழைய மாணவர் சங்க சமூகப்பணித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

பழைய மாணவர் சங்க சமூகப்பணித்திட்டம் கிளிநொச்சியில் ஆரம்பம்

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் விஜய தசமி நாளான இன்று தனது சமூகப்பணித்திட்டத்தை கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் ஆரம்பித்தது.கிளிநொச்சி இந்துக்கல்லூரி நூலகத்திற்கு க.பொ.த (உ/த) கா.பொ.த (ச/த) பரீட்சை வினாத்தாள் புத்தகங்கள் உள்ளடங்கலாக ஒரு தொகுதி புத்தகங்களினை வழங்கினர்.


கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நாவன்மைப்போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பதக்கம் அணிவித்து கௌரவித்தனர்.கல்லூரி மாணவர்களிற்கான சதுரங்க பயிற்சி வைத்திய கலாநிதி ஜெயராஜ் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்கும் எமது கல்லூரிக்குமிடையான பட்டிமன்றம் இடம்பெற்றது. இதில் எமது கல்லூரி பழைய மாணவர்களான உசாந்தன் ,அகிலன், உமாகரன் ஆகியோர் பங்குபற்றினர். இந்த பட்டிமன்றத்தின் நடுவராக எமது தாய்ச்சங்க செயலாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் கலந்து கொண்டார்.


இந்த விழாவில் தாய்ச்சங்க தலைவர் ,செயலாளர் ,நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் எமது சங்க தலைவர், செயலாளர் ,பொருளாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.