1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22

1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22

எமது சங்க ஆட்சிக்குழுவின் 1வது செயற்குழுக் கூட்டம் 22.05.22 அன்று சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
– கல்லூரிக்கு வழமையாக ஆற்றும் அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
– திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக திட்ட உப பிரிவுகள் (Wings) உருவாக்கப்பட்டு அதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். செயற்குழுவில் அங்கத்துவம் வகிக்காத பழையமானவர்கள் இணைந்து செயலாற்ற இது துணை புரியும். (விபரங்கள் விரைவில்)
– அங்கத்துவத்தினை அதிகரிக்கவும், பொறிமுறையை விரைவுபடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
– திட்டங்கள், நிதி மூலங்களை இனம் காணல் போன்றவற்றிற்காக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் ஏனைய பழைய மாணவர் சங்கங்கள் , பழைய மாணவர்களுடன் தொடர்புக்களை பேணி விரைவு படுத்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
– கல்லூரி சிற்றுண்டிச்சாலையை ஆரோக்கிய சிற்றுண்டிச்சாலையாக நடைமுறைப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
– நிலையான வைப்புக்களை அதி உயர் வட்டி தரும் வங்கிக்கு மாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.
– திட்ட உபகுழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
மேலதிக விபரங்கள் எமது சங்க இணையத்தளத்தில் விரைவில்.
செயலாளர்
22.05.22