திறமைக் களம் 2023

திறமைக் களம் 2023

யாழ் இந்து அன்னையின் மைந்தர்களின் ஆற்றல்களுக்கு வலுவூட்டவும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஒரு களத்தினை அமைக்கும் நோக்கில்
இந்துவின் *திறமைக்கான களம் 2023*ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டி விதிமுறைகள்:-
• யாழ். இந்துவின் பழைய மாணவர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும்
• வயது வேறுபாடின்றியும், உலகின் இந்தப் பிரதேசத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம்.
• ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திறமைத் தெரிவுகளில் பங்குபற்ற முடியும்.
• போட்டிக்கான விண்ணப்பங்கள் Google form ஊடாக அனுப்பி வைக்கவேண்டும்.
• போட்டிகளுக்கான ஆரம்ப கட்ட தேர்வுகள் வீடியோ பதிவு மூலமும் இறுதிப்போட்டியானது நேரடியாகவும்/ நிகழ் நிலை மூலமும் நிகழ்த்தப்படும்.
• 04 1/2 முதல் 05 நிமிடங்களுக்குள் அடங்கக் கூடியதாக உங்கள் திறமைக்கான வெளிப்படுத்தல் வீடியோவை நீங்கள் பதிவிட்டு கொள்ள முடியும்.
• உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை பின்வரும் ஏதோ ஒரு ஊடக வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
• WHATSUP – 0778597561
• VIBER- 0778597561
• GOOGLE DRIVE (பதிவேற்றிய இணைப்பு முகவரியை அனுப்பி வைக்கவும்)

• விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி 30.03.2023.

 

• வீடியோ பதிவுகளுக்கான பதிவேற்றல் முடிவுத் திகதி 07.04.2023 இரவு 07.00 மணி.
• வெற்றியாளர்களுக்கான வெகுமதிகள் காத்திருக்கின்றன.
• ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் பங்குபற்றலுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.